அர்னவிற்குப் பிறந்த குழந்தையின் முகத்தை முதன்முதலாக காட்டிய திவ்யா
அர்னவ்-திவ்யா சர்ச்சை சென்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் திவ்யா முதன் முதலாக தனது குழந்தையின் முகத்தை காட்டியபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அர்னவ்-திவ்யா
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ்வும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
5 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இதில் அர்னவ் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் இரு மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்கள்.
திருமணம் முடித்து கொஞ்சநாளில் திவ்யா கர்ப்பமாகிவிட, இருவருக்கும் பயங்கரமான கருத்து வேறுபாடு இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.
குழந்தையுடன் திவ்யா
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா பெண் குழந்தை ஒன்றை பிரசவித்து இருந்தார். குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட செல்லாத நிலையில் குழந்தையை தூக்கிக் கொண்டு சீரியலில் நடிக்க ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில், திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு தாய் தனது குழந்தைக்காக எப்போதும் துணையாக இருப்பாள், எதுவாக இருந்தாலும் என பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு பலரும் குழந்தை அர்னவ் போல இருக்கிறது எனவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |