அவர் கட்டாயம் இருப்பார்... டி20 உலககோப்பை தேர்வுக்கு டிராவிட் வைக்கும் புதிய செக்!
இந்திய அணி டி20 உலகோப்பைக்கு தயாராகுவதற்கு தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அடுத்தடுத்து தொடரில் பங்கேற்கிறது.
தென்னாப்பிரிக்கா அணியுடன் நடந்த 4 போட்டிகளில் இரண்டு அணியும் தலா 2 வெற்றிகளை பெற்று இறுதி போட்டி மழையின் காரணமாக ரத்தானதால், தொடர் டிராவில் முடிந்தது.
இதனையடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக தயாராகி வருகிறது. எனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு இன்னும் அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆசியக்கோப்பை என 4 தொடர்கள் மட்டுமே உள்ளன.
இதனால் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள்ளாக இறுதி செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும்.

டிராவிட் பாராட்டு
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா காட்டிய ஆட்டம் அணிக்கு பக்கபலமாக உள்ளது.
மேலும், தினேஷ் கார்த்திக்கின் கம்பேக், எங்களின் பணியை சுலபமாக்கியுள்ளது. நான் எப்போதுமே வீரர்களிடம், டி20 உலகக்கோப்பை அணிக்கான கதவுகளை தட்டாதீர்கள், ஓங்கி அடித்து உடைத்துவிடுங்கள் எனக்கூறுவேன்.
அந்த வகையில் தினேஷ் கார்த்திக் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து வருகிறார் என டிராவிட் பாராட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க தொடரில் தினேஷ் கார்த்திக் 4 போட்டிகளில் விளையாடி 92 ரன்களை குவித்தார். அதேப்போல் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வேண்டும் அணியில் இடம் பிடிப்பது பெரிய சவாலான விஷயம் தான் என டிராவிட் தெரிவித்துள்ளார்.

டி20 உலககோப்பையின் தேர்வு எப்படி இருக்கும்?
இதுகுறித்து, பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவிக்கையில், அதில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்ய, ராகுல் டிராவிட் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
அதாவது டி20 உலகக்கோப்பைக்காக அவர் யோசித்து வைத்துள்ள வீரர்களுக்கு அவர் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருகிறார்.
அக்டோபரில் நடக்கும் டி20 உலகக்கோப்பை வரை ஒரேமாதிரியான அணிதான் இருக்கும் என கங்குலி கூறினார்.