போலி பசியையும் உண்மை பசியையும் எப்படி கண்டுபிடிப்பது?
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் பசி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. பசி எடுத்தால் தான் உணவு சாப்பிட வேண்டும்.
இதை முறையுட் சாப்பிடுவது தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பசியில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று பசி எடுத்து சாப்பிடுவது இன்னொன்று பசி எடுக்காமலே சாப்பிடுவது போல இருந்தால் உணவை சாப்பிடுவார்கள்.
இதனை தான் போலி பசி என்று கூறப்படுகிறது. போலி பசி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

போலி பசியை எப்படி கண்டுபிடிப்பது?
போலி பசி என்பது பசி எடுக்காது. யாராவது சாப்பிடுவதை பார்த்தால் நாமும் சாப்பிட வேண்டும் என தோன்றும். கோபமாக இருக்கும் போது, சோகமாக இருக்கும் போதும் போன்ற நேரங்களில் சாப்பிட வேண்டும் என தோன்றும்.
சாப்பாடு சாப்பிட வேண்டும் என்பதை விட ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதுவே உண்மையாக பசி எடுத்தால் வயிற்றில் சத்தம் கேட்கும்.
நம்முடைய உடல் நிலையானது சோர்வாகும். வயிற்றில் எதுமே இல்லாதது போல இருக்கும். சில நபர்களுக்கு வயிறு பிரட்டல் ஏற்பட கூடும். இன்னும் சிலருக்கு தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகள் இருந்தால் உண்மையாக பசி என்று அறிந்து கொள்ளலாம்.

போலி பசி ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தம். மகிழ்ச்சி, கவலை போன்ற நிலைகளில் இருக்கும் போது ஸ்னாக்ஸ் ஆக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தொலைக்காட்சி மற்றும் மொபைல் பார்க்கும் போது ஏதாவது சாப்பிட்டு கொண்டே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பசி எடுக்கவில்லை என்றாலும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தோன்றும். நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்திருப்பீர்கள்.
அப்போது உங்களுக்கு வயிறு காலியாக இருக்க கூடும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மூளை கூறும், ஆனால் நீங்கள் பசி எடுக்கிறது சாப்பிட வேண்டும் என்று நினைத்து சாப்பிடுவீர்கள்.

எப்படி சாப்பிட வேண்டும்?
நீங்கள் உணவை நன்றாக பசித்த பிறகு சாப்பிடுங்கள். அவை தான் உடலிற்கு நன்மையை தர கூடியதாக இருக்கும். பசி எடுக்காமல் எந்த உணவு மற்றும் ஸ்னாக்ஸ் எதுவாக இருந்தாலும் சாப்பிடாதீர்கள்.
நீங்கள் சாப்பிட கூடிய உணவில் புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து இருக்கும்படி உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். முக்கியமாக காலை உணவை தவிர்க்காதீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |