சர்க்கரை நோயாளிகளை சுண்டி இழுக்கும் வெந்தயக் குழம்பு! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக வீடுகளிலிருக்கும் சிறுவர்களுக்கு பெரியவர்கள் வரை உடல் சூடு பெறும் பிரச்சினையாகவுள்ளது.
இதனால் வாய்களில் புண், குடல் புண், வயிற்றுவலி, மாதவிடாய் பிரச்சினை கண் எரிச்சல், முடி உதிர்வு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினை உண்டு பண்ணுகிறது.
இதனால் சிலர் மருத்துவர்களை நாடுவார்கள், ஆனால் இந்த மருந்து வில்லைகள் நிரந்தர தீர்வை தராது.
வீட்டில் உள்ள சில மூலிகைப் பொருட்களை ரசம், குழம்பு செய்து சாப்பிடுவதால் உடல் சூட்டு பிரச்சினை தனியும். மேலும் இதனை சக்கரை வியாதியுள்ளவர்களும் சாப்பிடலாம்.
அந்த வகையில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் குழம்பு எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
ஜீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு ( தோல் உரித்தது ) – 50 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
வெந்தய பொடி ( வறுத்து பொடி செய்தது ) – 2 ஸ்பூன்
புளிக் கரைசல் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் நெல்லிக்காயை அளவு புளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
இது ஒரு புறம் இருக்கையில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், ஜீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளிக்கும் போது உரித்து வைத்துள்ள பூண்டு சேர்க்கவும்.
பின்னர் வதங்கியதும் சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் , மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு கொதித்து வரும் போது வறுத்து பொடி மற்றும் வெந்தயப் பொடி ஆகியவற்றை சேர்த்து கொதி வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சூப்பரான வெந்தயக்குழம்பு தயார்!