இரத்த சக்கரையை கட்டுக்குள் வைக்க தடுமாறுகிறீர்களா? அப்போ உங்களுக்கான சூப்பர் ரெசிபி
இரத்த சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.
இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க காலை வேளைகளில் சாப்பிட ஏற்ற உணவுதான் இந்த சுவையான சோள உப்புமா!
தேவையான பொருட்கள்
- மக்கா சோள ரவை - 1 கப்
- வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
- பச்சை பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
- ரவை -1/2 கப்
- காய்கறிகள் - 1/2 கப் (வேக வைத்தது)
- கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1-2 சிட்டிகை
- கடுகு - 1தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 8-10 (நறுக்கியது)
- எலுமிச்சை -1
- தே. எண்ணெய் - 1-2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் பட்டாணியின் தோலை நீக்கி விட்டு கேரட், பீன்ஸ் போன்றவற்றை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் என்பவற்றையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதில் ரவையை சேர்த்து வறுக்கவும் அதில் மக்கா சோள ரவையையும் சேர்த்து கிளறி 2 நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் பச்சை மிளகாய் விழுது, பட்டாணி, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்தப் பின்னர் வேக வைத்த காய்கறிகளையும் சேர்க்கவும்.
பிறகு தேவையான அளவு கொதிக்கும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக எலுமிச்சை சாற்றை சேர்த்து அடுப்பை அணைத்தால் சோள ரவை உப்புமா தயார்.