மணமணக்கும் பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் செய்வது எப்படி? 10 நிமிடம் போதுமாம்!
பொதுவாக மாலைநேரம் வந்தாலே எதாவது சாப்பிட வேண்டும் என்று யோசனை வரும்.
இதன்போது நாம் செய்யும் உணவுகள் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும் என்று வீட்டிலுள்ள பெரியவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அந்தவகையில் மாலை நேர டீ க்கு பிஸ்கட், கட்லெட், முறுக்கு, அப்பம், என பல வகையான உணவுகள் செய்யலாம்.
மேலும் வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு மொறு மொறு சுவையிலிருக்கும் உணவுகள் என்றால் அதிகமாக பிடிக்கும்.
இந்நிலையில் பச்சை பட்டாணியை வைத்து பச்சை பட்டாணி பன்னீர் கட்லெட் எவ்வாறு செய்வது குறித்து தெளிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - 3/4 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கடலை மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பன்னீர் - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் பச்சை பட்டாணியை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
அதன்பின்னர் கட்லெட்டுக்கு தேவையான தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கிகொள்ளவும். தொடர்ந்து கட்லெட்டுக்கு தேவையான பன்னீரை துருவிக்கொள்ளவும்.
ஒரு பௌலை எடுத்து அதில் மசித்த பச்சை பட்டாணியை போட்டு, அத்துடன் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பன்னீர், மற்றும் உப்பு சேர்த்து களந்து விட்ட பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கட்லெட் போல் தட்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
எண்ணெயிலிருக்கும் கட்லெட் பொன்னிறமாக மாறிய பின்னர் இறக்க வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த சுவையான கட்லெட் தயார்!