வெறும் வயிற்றில் கொத்தமல்லி டீ குடிக்கலாமா?
கொத்தமல்லி உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் நிறைந்தது. இது சமையலுக்கு அதிகம் பயன்படும் ஒரு மருத்துவ பொருளாகும்.
இந்த கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாகும். இந்தக் கொத்தமல்லி இலையானது உங்கள் மறதியை கட்டுப்படுத்தி நிறைவாற்றலை அதிகரிக்கும் மற்றும் வாய்ப்புண்களையும் விரைவில் குணமாக்கும்.
இந்தக் கொத்தமல்லி இலையில் டீ போட்டுக் குடித்தால் இன்னும் அதிகம் நன்மைகள் தான்.
கொத்தமல்லி டீ செய்யும் முறை
கொத்தமல்லி இலை - 1 கப்
நட்சத்திர பூ - 1
மஞ்சள்தூள் - 1
தண்ணீர் - 1 ½ கப்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து, கொதிக்கும் தண்ணீரில் நட்சத்திர பூ மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்பொது பாத்திரத்தை மூடி சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர், அடுப்பை அணைத்து விட்டு, கொதிக்க வாய்த்த தண்ணீரை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றவும். அவ்வளவுதான் கொத்தமல்லி தேநீர் தயார். நீங்கள் விரும்பினால் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.
யாரெல்லாம் குடிக்கலாம்
- மூட்டு மற்றும் முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டவர்கள்
- இரத்த அழுத்தம் கொண்டவர்கள்
- தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புபவர்கள்