நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு அளிக்கும் ஒரே மூலிகை பொடி! எவ்வாறு பயன்படுத்தலாம்?
இன்றைக்கு பெரும்பாலோனருக்கு நீரிழிவு நோய் உயிரை பறிக்கும் கொடிய நோயாக தான் உள்ளது. ஆயுள் முழுக்க கூடவே வரும் நோயாளிகளில் இதுவும் ஒன்று. இது வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நீரிழிவுக்கு பல காரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இந்த காரணங்களுக்கான வாய்ப்பு முன்னோர்களின் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் குறைவாகவே இருந்தது. காரணம் அவர்கள் எடுத்துகொண்ட உணவு வகைகள்.
ஏனெனில் இயற்கை உணவுகள் பெரும்பாலும் சர்க்கரை நோய்க்கு மருந்தாகவே இருந்தது.
அப்படியான உணவு மூலிகையில் சிறுகுறிஞ்சான் மற்றும் நாவல் கொட்டை பெரிதும் உதவி புரிகின்றது. அந்தவகையில் நீரிழிவு கட்டுப்படுத்த இதை எப்படி எடுத்துகொள்வது என்று பார்க்கலாம்.
தயாரிக்கும் முறை
சிறு குறிஞ்சான் இலையை உலரவைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து எடுக்கவும். இரண்டையும் சம அளவு கலந்து கண்ணாடி பாட்டிலில் வைத்துகொண்டு தொடர்ந்து 21 நாட்கள் காலை, மாலை அரை டீஸ்பூன் அளவு வாயில் போட்டு வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும். பிறகு இரத்த சர்க்கரை அளவை பரிசோதியுங்கள்.
பிறகு மீண்டும் 21 நாட்கள் எடுக்க வேண்டும். உணவிலும் கட்டுப்பாடுகள் கடைபிடியுங்கள். நிச்சயம் மாற்றம் இருக்கும்.
நன்மைகள்
சிறுகுறிஞ்சான் உடலில் வாதம், பித்தம் கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க உதவுகிறது.
உடல் உஷண்மாக இருப்பவர்கள் இதை எடுத்துகொண்டால் உஷ்ணம் தணிக்கிறது. மன அழுத்த குறைக்கிறது.
நரம்புக்கு வலு கொடுக்கிறது. காய்ச்சல், இருமல் காலங்களில் அதை குணப்படுத்த உதவுகிறது.சுவாச நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நாவல் பழங்கள் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவை கொண்டவை.
நாவல் கொட்டையை பவுடராக்கி சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் கொடுக்கும்.
குறிப்பு
நாவல் கொட்டை சிறு குறிஞ்சான் இரண்டுமே நீரிழிவை கட்டுப்படுத்தும் அருமருந்துகள். நீரிழிவை கொண்டிருப்பவர்கள் மருந்துகளுடன் சேர்த்து இதை எடுத்துகொள்ளலாம். இவை பக்கவிளைவுகளை உண்டாக்காது.
ஆனால் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் இதை தொடர்ந்து எடுக்க கூடாது. நீரிழிவு அதிகமாக இருப்பவர்கள் இந்த பொடியை எடுக்கும் போது சரியான இடைவெளியில் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.
நீரிழிவு கட்டுக்குள் வைக்க முடியாமல் தொடர்ந்து அதிகமாகவே கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்வது பாதுகாப்பானது.