தனுஷின் அண்ணன் மனைவியா இது? மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்
நடிகர் தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவு வைரலாகி வருகின்றது.
மாடர்ன் உடையில் செல்வராகவன் மனைவி
தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் 2006ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கடந்த 2011ம் ஆண்டு இரண்டாவதாக கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
அவ்வப்போது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது, தனது திருமண நாள் குறித்த நெகிழ்ச்சி பதிவினை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ’13 ஆண்டுகள் உன்னுடன் வாழ்ந்தது சிறப்பான அனுபவங்கள்... நீ இல்லாமல் இத்தனை ஆண்டுகள் என்ன செய்திருப்பேன் என்பதை கூட யோசித்து பார்க்கிறேன்.. என் வாழ்வில் சிறப்பு வாய்ந்த நபர்... இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்து கூறியுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், லைக்ஸையும் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் செல்வராகவன் விரைவில் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |