அந்த நபரால் தான் செல்வராகவன்-சோனியா அகர்வால் பிரிந்தார்களாம்... : வெளியான தகவல்
செல்வராகவன்-சோனியா அகர்வால் பிரிவுக்கு அவரது தந்தை கஸ்தூரிராஜா காரணம் என்று தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் செல்வராகவன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தன் தம்பி தனுஷை அறிமுகப்படுத்தினார். இன்று தனுஷ் உலக பிரபல நடிகராக வளர்ந்து முன்னேறியுள்ளார்.
செல்வராகவனின் தந்தையான கஸ்தூரிராஜாவும் தமிழ் சினிமா இயக்குநர் தான். செல்வராகவனின் படங்களான 7G ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம், ஆயிரத்தில் ஒருவன் உட்பட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.
பிரிவுக்கு இவர்தான் காரணமாம்
இயக்குநர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை காதலித்து 2006ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். இவர்கள் இருவரும் பிரிவதற்கு கஸ்தூரிராஜா தான் காரணம் என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருமணம் செய்வதற்கு முன்பே சோனியா அகர்வாலுக்கு குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் இருந்து வந்தது. இப்பழக்கம் திருமணத்திற்கு பிறகும் நீடித்துள்ளது. பலதடவை கஸ்தூரி ராஜா இந்த பழக்கத்தை கைவிட்டும்படி கேட்டுள்ளாராம். ஆனால், சோனியா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த பழக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனால், செல்வராகவனுக்கும்,சோனியா அகர்வாலுக்கும் இடையே பயங்கர சண்டை வெடித்து விவாகரத்து வரை சென்றதாம். தற்போது இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |