இவ்வளவு மோசமான குணம் கொண்டவரா அசீம்? சக சீரியல் நடிகை உடைத்த உண்மை முகம்
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அசீமை சீரியல் நடிகை தேவிப்பிரியா நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 6
ஏறக்குறைய 70 நாட்களாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் ஒரு போட்டியாளராக பங்கேற்று தற்போது வரை விளையாடிக் கொண்டிருக்கிறார்.
அசீமை பொறுத்தவரை மற்றவர்கள் கோபப்பட்டு கத்தும் பொழுது ஓடி சமாதானப்படுத்தவும் அவர்களின் சண்டையை விலக்கி விடவும் செய்வார்.
ஆனால் தான் கோபப்பட்டு கத்தும் பொழுது டென்ஷன் அதிகமாக ஆகும் போது தன்னையே மறந்த நிலைக்கு சென்று விடுவார். இவையே அசீம் குறித்த பார்வையாளர்கள் மற்றும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸின் இயல்பான கருத்தாக உள்ளது.
இந்நிலையில் அண்மையில் பிரத்தியேக பேட்டியொன்றில் அசீம் பற்றி நடிகை தேவிப்பிரியா பேசியுள்ளார்.
அசீம் நடிகனே இல்லை
“அசீம் எனக்கு நல்ல நண்பர் கிடையாது. என் கணவரின் சீரியலில் அசீம் நடித்திருந்தார். சன் டிவி பூவே உனக்காக சீரியலில் ஆரம்பத்தில் நடிகர் அருண் நடித்து வந்தார்.
அவர் சீரியலில் இருந்து விலக, பின்பு அசீம் நடிக்க தொடங்கினார். அசீம் வரும்போது அவர் போட்ட கண்டிஷன்கள், அவர் விதித்த நிபந்தனைகள் அனைத்துக்கும் இசைந்து கொடுக்கும் நிலையில் புரொடக்ஷன் இருந்தது.
காட்சிகளில் நடிக்கும்போது சம்பந்தமே இல்லாமல் சொந்தமாக வசனம் பேசுவது, ஷூட்டிங்கில் ஹீரோயிஸம், Attitude காட்டுவது என்றெல்லாம் இருந்தார் அசீம். இதனால் எனக்கும் அவருக்கும் பல முறை வாதம் நீண்டது.
ஒரு கட்டத்தில், “நீங்கலாம் டைரக்டர் ஆனா நான் நடிக்க மாட்டேன்” என்றார் அசீம் அதற்கு நானும் நீ நடிகனே இல்லை என்பதுபோல், உங்களை ஹீரோவாகவே நான் நினைக்கல” என சொன்னேன்.
அப்போதும் சண்டை அதிகரித்தது. எங்கள் சண்டையை விலக்கவே பெரிதும் கஷ்டப்பட்டார்கள்.
மேலும் அசீம் என்னை நீ ஐதராபாத்ல இருந்து வந்தா பெரிய இவளா நீ? உன்னை செஞ்சிருவேன் என என்னை பேசியிருப்பார். இது தொடர்பில் மேலும் அவர் பேசிய விடயங்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.