டாஸ்க்கை சாக்கா வைத்து போட்டியாளர்ளை லெப்ட் ரைட் வாங்கும் அசீம்! தரமான சம்பவக்காட்சி..
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களை அசீம் லெப்ட் ரைட் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிக்காலக்கட்டத்தில் பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி சுமார் 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் கடந்துக் கொண்ட பிரபலங்களில் சுமார் 10 போட்டியாளர்களுக்கு மேல் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று இலங்கை ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜனனியின் அன்பு தோழர்களான அமுதவாணன் மற்றும் தனலெட்சுமி அதனை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ஜனனி வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என தேடிக் கொண்டிருந்தார்கள்.
தரமாக வைத்து செய்யும் அசீம்
இதனை தொடர்ந்து வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் கண்டிப்பாக அசீமின் பெயர் இருக்கும்.
அந்தவகையில் இந்த பிரச்சினையிலும் அசீமின் பேச்சு இருந்தது. இதனால் கடுப்பான அசீம் அதற்கான தருணங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதன்படி, இந்த வாரம் மழலை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள இதில் அசீம், விக்ரமன், அமுதவாணன் தவிர மற்றைய போட்டியாளர்கள் அனைவரும் மழலையாக மாறியுள்ளார்கள்.
இவர்கள் செய்த சேட்டைகளுக்கான பதிலடியை அசீம் இந்த டாஸ்க் கொடுத்து வருக்கிறார்.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளதுடன் அசீம் தான் டைட்டில் வின்னர் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.