இரண்டாவது திருமணத்திற்கு மாடர்ன் உடையில் தேவயானி! அழகில் தேவதையாக மாறிய காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானிக்கு இரண்டாவது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
தேவயானி
இயக்குனர் ராஜகுமாரானை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தேவயானி தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த தேவயானி தற்போது சீரியலில் களமிறங்கியுள்ளார்.
கோலங்கள் சீரியலுக்கு பின்பு தற்போது நடிக்கும் புது புது அர்த்தங்கள் சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
குறித்த சீரியலில் தேவயானி கணவர் இல்லாமல் தனது மகனை வளர்த்து வரும் லெட்சுமி அம்மாவாக இருக்கின்றார். இந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் அசத்தி வருகின்றார்.
இரண்டாவது திருமணம்
கோலங்கள் சீரியலில் நடித்த நடிகரே இந்த சீரியலிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இதில் தேவயானிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கு ஏ்ற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
தனது மகனுக்கே தெரியாமல் அவரது குழந்தையை வளர்த்து வரும் லெட்சுமிக்கு அவரது மகன் மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகிய காணொளியில் மாடர்ன் உடையில் கல்யாண பெண்ணாக கொள்ளை அழகில் தேவதை போன்று நடிகை தேவயானி நிற்கும் காட்சி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.