இரண்டாவது திருமணத்திற்கு தேவதையாக ஜொலித்த தேவயானி! பூதாகரமாக வெடித்த பிரச்சினை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியலில் தேவயானிக்கு இரண்டாவது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தையின் ரகசியத்தால் பாரிய பிரச்சினையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவயானி
இயக்குனர் ராஜகுமாரானை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தேவயானி தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த தேவயானி தற்போது சீரியலில் களமிறங்கியுள்ளார்.
கோலங்கள் சீரியலுக்கு பின்பு தற்போது நடிக்கும் புது புது அர்த்தங்கள் சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.
குறித்த சீரியலில் தேவயானி கணவர் இல்லாமல் தனது மகனை வளர்த்து வரும் லெட்சுமி அம்மாவாக இருக்கின்றார். இந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பில் அசத்தி வருகின்றார்.
இரண்டாவது திருமணம்
தற்போது சீரியலில் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நிலையில், வெட்டிங் போட்டோஷுட் நடைபெறுவதற்கு மாடர்ன் உடையில் அழகு தேவதையாக தேவயானி தோன்றினார்.
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் தேவயானியின் திருமண ஏற்பாடுகளுக்கு மத்தியில், குழந்தையின் ரகசியத்தை சந்தோஷ் அறிகின்றார்.
இதனால் குதூகலமாக இருக்கும் குடும்பம் தற்போது சுக்குநூறாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சீரியல் பெண்களிடையே பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.