நீங்க pink நிற விரும்பியா? அப்போ இந்த உளவியல் உண்மைகளை தெரிஞ்சிக்கோங்க!
நமது ஆளுமைகளுள் மற்றும் விருப்பங்களுக்கு இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
ஒவ்வொருக்கும் உடல் தோற்றம் , நிறம், உயரம், எடை ஆகியவற்றில் வித்தியாசங்கள் இருப்பதை போன்றே குணங்கிலும் நிச்சயம் வித்தியாசங்கள் இருக்கும்.
அந்தவகையில் உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்தே உங்களில் ஆளுமை மற்றும் உங்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களை கணித்துவிட முடியும் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதன் அடிப்படையில் நீங்கள் இளஞ்சிவப்பு (pink) நிறத்தை அதிகம் விரும்புபவர்களாக இருந்தால், உங்கள் ஆளுமை பண்புகள் மற்றும் விசேட குணங்கள் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
pink நிறம் பற்றிய உளவியல் உண்மைகள்
pink நிறம் நிறம் காதல் மற்றும் மென்மையின் நிறமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இந்த நிறத்தை அதிகம் விரும்புபவர்கள் காதல் மற்றும் ரொமான்ட் விடயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவர்கள் அடிப்படையில் பாசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், பாரம்பரியமாக பெண்பால் பண்புகளுடன் வலுவாக இணைக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.
மென்மையான இளஞ்சிவப்பு நிறங்கள் குழந்தைப் பருவம், விளையாட்டுத்தனம் மற்றும் தூய்மையின் உணர்வைத் தூண்டுகின்றன. இதை விரும்புபவர்களிடமும் இந்த குணங்களின் பிரபலிப்பு நிச்சயம் இருக்கும்.
அதுமட்டுமன்றி இளஞ்சிவப்பு நரம்பு மண்டலத்தில் ஒரு அமைதியான விளைவை ஏற்படுத்தும் என்றும், ஆக்கிரமிப்பைக் குறைக்க சிறைச்சாலைகள் போன்ற அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது என்றும் ஆய்வுகளில் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிறத்தை விரும்புவோர் அதிக உணர்ச்சிவசப்படும், சிறிய விடயங்களுக்கு மனமுடைந்து போகும் மென்மையானவர்களாக இருப்பார்கள். இந்த நிறத்தை பிடித்திருக்கின்றது என்றால், இது அப்பாவித்தனத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.
இந்த நிறத்தை விரும்புவோர் அதிக படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் புதிய கண்டுப்பிடிப்புளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களிடம் நகைச்சுவை உணர்வு மற்றும் குழந்தைத்தனம் அதிகமாக இருக்கும். இவர்கள் புத்துணர்வுடன் பார்பவர்களை வசீகரிக்கும் வகையில் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவை வண்ண உளவியலை அடிப்படையாகக் கொண்ட பொதுவான கருத்துக்கள். இவை அனைத்தும் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |