இதனால் தான் இளமையாக இருக்கிறேன்: அழகின் சீக்ரெட்டைப் பகிர்ந்த தேவயாணி
தான் எப்போதும் இதனால் தான் அழகாக இருப்பதற்கு இதுதான் காரணம் என பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தேவயாணி
தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் தேவயானி.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். காலம் செல்ல படங்களில் வாய்ப்பு குறைய சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
முதன்முதலாக ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அந்த சீரியல் பல சாதனைகளையும் செய்தது. பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு புது புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் ரீஎன்ரி கொடுத்திருப்பார்.
அழகின் ரகசியம்
தேவயாணியின் இந்த வயதிலும் எப்படி அழகாக இருக்கிறார் என்று கேட்டதற்கு இதற்கெல்லாம் தாய் தந்தையின் ஆசியும் கடவுளின் அனுக்கிரகமும் தான் என்கிறார்.
மேலும், இவர் எப்போதும் டயட் எல்லாம் இருந்தததில்லையாம், எண்ணெய் உணவுகளையும், துரித உணவுகளையும் உட்கொள்வதில்லையாம் மாறாக எவ்வளவு நேராமானாலும் வீட்டில் சமைத்த உணவுகளைதான் அதிகம் எடுத்துக்கொள்வாராம்.
தன் உடலையும் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு தினமும் நடைப்பயிற்சி செய்வாராம், வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வாராம் மேலும், நிறைய மாடிப்படிகளை ஏறி இறங்குவாராம்.
எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உங்களுக்கு என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் பெண்கள் தான் வீட்டிற்கு எல்லாமே அதனால் உங்களுக்கு என்று குறைந்தது 1/2 அல்லது 1 நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.
தான் எப்போதும் என்தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மாத்திரம் தான் பயன்படுத்துவேன். தேங்காய் எண்ணெய் எல்லாவற்றிற்கும் உதவும் அதனால் பயப்படாமல் பாவிக்கலாம்.
மேலும், தினமும் சந்தோசமான இருக்க வேண்டும், அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். எப்போது நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும் என பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.