சிக்கலில் நடிகை தேவயானி! உதவிக்கு களமிறங்கிய பிரபலங்கள்: பரபரப்பான காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் புது புது அர்த்தங்கள் சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேவயானிக்கு உதவி செய்வதற்கு பிரபல நட்சத்திரங்கள் களமிறங்கியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
தேவயானி
இயக்குனர் ராஜகுமாரானை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தேவயானி தற்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த தேவயானி தற்போது சீரியலில் களமிறங்கியுள்ளார்.
புதுபுது அர்த்தங்கள் சீரியலில் தேவயானி கணவர் இல்லாமல் மகனை வளர்த்து வரும் லெட்சமி அம்மாவாக மாறி, அந்த கதாபாத்திரமாகவே நடிப்பில் அசத்தி வருகின்றார்.
கோலங்கள் சீரியலில் நடித்த நடிகரே இந்த சீரியலிலும் நடித்து வருகின்றார். இவருக்கும் தேவயானிக்கும் நடக்கவிருந்த திருமணம் இறுதிநிமிடத்தில் நின்று போனது.
தேவயானிக்கு உதவும் பிரபலங்கள்
மகனுக்கு தெரியாமல் அவரது விந்தனுவில் பிறந்த குழந்தை தேவயானியின் கைக்கு வந்த நிலையில், அக்குழந்தையை வளர்த்து வந்தார்.
திருமணத்திற்கு தயாரான தருணத்தில் தேவயானியின் மகனுக்கு குழந்தையின் ரகசியம் தெரிந்த நிலையில், குழந்தையை வெளிநாட்டு தம்பதிகளுக்கு கொடுத்துவிடுகின்றார்.
இதனை தெரிந்து கொண்ட ஹரி குழந்தை காப்பாற்றி அழைத்து வரும் போது குழந்தை ஆற்றில் தவறி விழுந்துவிடுகி்ன்றது. குழந்தை இறந்துவிட்டதாக நினைத்த தேவயானி ஹரியை வெறுத்துள்ளார்.
தற்போது குழந்தையும் கிடைத்துவிட, ஹரியை குறித்த உண்மையை தெரிந்து கொண்ட தேவயானி ஹரியுடன் சேர்வதற்கு உதவி செய்வதற்கு மூன்று புதிய பிரபலங்களை பிரபல ரிவி களமிறக்கியுள்ளது.