அறிமுகமானதே கவர்ச்சிப் பாடலில் தான்... தேவயானியின் சினிமா கதை பற்றி தெரியுமா?
தேவயானி சினிமாவில் முதன்முதலாக கவர்ச்சிப் பாடல் ஒன்றின் மூலம் அறிமுகமான செய்தியை பகிர்ந்திருக்கிறார் செய்யாறு பாலு.
நடிகை தேவயானி
தொட்டா சிணுங்கி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார் தேவயானி.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். காலம் செல்ல படங்களில் வாய்ப்பு குறைய சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். முதன்முதலாக ‘கோலங்கள்’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
அந்த சீரியலுக்குப் பிறகு நீண்ட இடைவேளையை எடுத்து மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சீரியல்களில் அவ்வப்போது தலைக் காட்டி வருகிறார்.
தேவயானியின் அறிமுகம்
தேவயானி பற்றி பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலா சுவாரஸியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அதில், தேவயானி வடமாநிலத்தை சேர்ந்த நடிகையாவார்.
அவர் முதன் முதலில் பொலிவூட்டில் தான் நடிக்க முயற்சி செய்து அதற்கு வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் சினிமாவில் நுழைத்து கவர்ச்சிப் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வாய்ப்பு தான் கிடைத்ததாம்.
கவர்ச்சியாக நடனம் ஆட விருப்பம் இல்லாமல் இருந்தாலும் முதல் வாய்ப்பை தவற விட வேண்டாம் என்ற எண்ணத்தில் தேவயானி அந்த பாடலில் ஆடி இருப்பார்.
ஆனாலும் அந்தப் பாடல் பெரிதாக போகவில்லை என்பதால் தொடர்ந்தும் கவர்ச்சி படங்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அவருக்கு அது சரிவராத காரணத்தால் நடிப்பில் இருந்து விலக முடிவெடுத்த போது தான் காதல் கோட்டைப் படம் கிடைத்து அதனைத் தொடர்ந்து நல்ல குடும்பபாங்கான கதாப்பாத்திரங்கள் கிடைத்தது.