ஆந்திர ஸ்டைல் கோவக்காய் சட்னி செய்வது எப்படி?
பொதுவாக நம்மில் பலரும் தினமும் என்ன சமையல் செய்வது என்பது பெரும் குழப்பமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருப்பவர்களும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அவ்வாறு எதிர் பார்ப்பவர்களுக்கு கோவக்காயில் சட்னி செய்து அசத்தலாம். இந்த பதிவில் கோவக்காய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கோவக்காய்
தக்காளி
உப்பு
பெருங்காயம்
கொத்தமல்லி
கறிவேப்பிலை
மிளகு
காய்ந்த மிளகாய்
பூண்டு
பச்சை மிளகாய்
தண்ணீர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 2 கரண்டி நல்லெண்ணெயை ஊற்றி அது நன்கு சூடான பின் வெட்டி வைக்கப்பட்ட கோவக்காயை போட்டு 7 முதல் 8 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியப்பின் 2 தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு உப்பு தேவையான அளவு, 3/4 கரண்டி பெருங்காயம், 1 கை அளவிலான கொத்தமல்லியை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் 1 1/2 கரண்டி நல்லெண்ணெயை ஊற்றி நன்கு சூடானப்பின் 10 காய்ந்த மிளகாய், 1 கை அளவு வேர்க்கடலை, 1 கரண்டி மிளகு, 20 பல் பூண்டு, 5 பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கிய இந்த கலவையை மிக்ஸியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும். மற்றோரு பக்கம் பேஸ்ட் செய்ய வைத்திருந்த கோவக்காயையும் தக்காளியையும் மிக்ஸியில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
பின்பு எண்ணெய் கடுகு போட்டு தாளித்து குறித்த சட்னியை ஊற்றி கலக்கவும். தற்போது சுவையான கோவக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |