சமையல் செய்தே கோடிகளில் கொட்டும் வருமானம்! Youtube-ல் சாதித்தது எப்படி?
இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களானது நம்மில் பல பேர் தவறாமல் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும்.
சாப்பாடு மற்றும் தூக்கத்தை விட இந்த சமூக வலைத்தளமானது முக்கியமானதாக திகழ்கிறது, அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருந்தது.
பலரும் யூடியூப் சேனல்கள் தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர்.
எதற்கெடுத்தாலும் யூடியூப் வீடியோ என அனைத்துவிதமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்கின்றனர்.
அவ்வாறு சமையல் வீடியோக்கள் மூலம் பெண் ஒருவர் மாதம் லட்ச ரூபாய் வருமானமாக பெறுகிறார் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், நிஷா மதுலிகா என்கிற பெண் அவர்களது வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான subscriberகளை பெற்று நன்கு சம்பாதித்து வருகிறார்.
தனது ஓய்வுகாலத்திலும் ஓய்வு எடுக்காமல் அந்த நேரத்தையும் பயனுள்ளதாக செலவழித்து வருகிறார்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததும் தொழில்முனைவோரான எம்.எஸ். குப்தாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆரம்பகாலத்தில் ஆசிரியர் பணியாற்றிய இவர் பின்பு அவரது கணவர் தொழிலின் நிதியை கையாண்டு வந்தார்.
குடும்பத்துடன் நொய்டாவிற்கு மாறியபோது இந்த வேலையை மேற்கொள்வது கடினமாக இருந்ததால் இதை விட்டுவிட்டார்.
கணவர் அலுவலகத்துக்கு சென்றதும் சுமார் 6 மணி நேரம் வீட்டில் சும்மா இருப்பதை வெறுத்த இவர் ஏதாவது பயனுள்ளதாக செய்யவேண்டும் என்று விரும்பினார்.
நிஷா மதுலிகா 2007ஆம் ஆண்டில் சமையல் தொடர்பான பதிவுகளை எழுதி வெளியிட தொடங்கினார்.
இதில் பெரும்பாலானவை அவரது அம்மாவிடம் இருந்து கற்றுகொண்டவையே, இதை எழுத தொடங்கியபோது இவருக்கு 54 வயதாகும்.
இவரது மகன்களும், கணவருமே இணையத்தளங்களை உருவாக்க முற்றிலும் உதவினர். இவரது குறிப்புகளானது பெருமளவில் வரவேற்கப்பட்டதால், இவரை வீடியோ பதிவாக வெளியிடுமாறு கேட்டனர்.
2011 ஆம் ஆண்டில் தனது யூடியூப் channel ஐ ஆரம்பித்து 2200 வீடியோக்களை வெளியேற்றினார்.
சமையல் வீடியோக்களை வெளியிடுவோர்களில் மிகவும் பிரபலமான ஒருவராக நிஷா மதுலிகா உள்ளார்.
Vodafone's Woman of Pure on the coffee table புத்தகத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றார்.
ஓய்வில் இருப்பதை நினைத்து வருந்திய இவர் தற்போது சற்றுக்கூட உட்கார இயலாத அளவிற்கு தன்னுடைய 64 வயதிலும் கடுமையாக உழைப்பது மட்டுமின்றி எல்லாருக்கும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.
இவரது யூடியூப் channelக்கு 1.4 கோடிக்கும் மேற்பட்ட subscriberகள் உள்ளனர், லட்சக்கணக்கில் வருமான ஈட்டும் இவரது சொத்துமதிப்பானது ரூ.29 என்று மதிப்பிட்டுள்ளது.