நடிகர் விஜய்க்கு இவ்வளவு அழகான அத்தை பெண்ணா? வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் தனது மாமா பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது கிரெடேஸ்ட் ஆஃப் ஆள் டைம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் First லுக் போஸ்டர் தலைப்புடன் நேற்று வெளிவந்தது.
தற்போது விஜய் பல சமூக பணிகளை செய்து வருகின்றார். பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியது, வெள்ள நிவாரண உதவி செய்வதற்கு களத்திற்கு நேரடியாக சென்று செய்து வருகின்றார்.
இதனால் தமிழ் மக்களின் முக்கியமான இடத்தினை பிடித்துள்ள நிலையில், விரைவில் அரசியலில் குதித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜய்யின் மாமா மகள்
நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவின் சகோதரர் எஸ்.என். சுரேந்தர் பற்றி பலருக்கும் தெரியும். இவர் திரையுலகில் பின்னணி பாடகர் ஆவார். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்துள்ளார்.
இவருக்கு விராஜ் மற்றும் பல்லவி என இரு பிள்ளைகள். இவர்கள் இருவரையம் அவ்வளவாக யாரும் பார்த்தது இல்லை.
விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் துபாய் சென்றுள்ள நிலையில் அங்கு தனது அத்தையடன் பல்லவி புகைப்படம் எடுத்துள்ளார்.
இதனை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பார்த்து வியப்பில் ஆழ்ந்ததுடன், விஜய் தனது அத்தை பெண்ணுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை எடுத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |