முதல் முறையாக மகளை அறிமுகப்படுத்திய தீபிகா படுகோண்! குவியும் லைக்குகள்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தீபிகா படுகோண்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா தீபிகா படுகோண் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து சுமாராக 6 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினருக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஒரு வடத்துக்கு பின்னர் இந்த தீபாவளி பண்டிகையில் தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்கு தீபிகா படுகோண் ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |