கனவில் இந்த விடயங்கள் வந்தால் எச்சரிக்கையா இருங்க: மரணம் நிகழலாம்
பொதுவாகவே கனவுகள் என்பது நமது ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது. ஆனால், இந்த கனவுதான் நமக்கு வரவேண்டும் என்று ஒருபோதும் நம்மால் ஆசைப்பட முடியாது.
ஏனென்றால் உண்மையில் நாம் காணும் கனவுகளுக்கும் நமது வாழ்க்கைக்கும் இடையில் தொடர்புள்ளது. அதனால் நாம் காணும் கனவுகள் நமக்காக ஒரு மறைமுக செய்தியை ஒளித்து வைத்திருக்கும். சரி இனி மரணத்தை முன்கூட்டியே கூறும் கனவுகள் என்னவென்று பார்ப்போம்...
அழும் குழந்தை
உங்கள் கனவில் நீங்கள் அழுகின்ற குழந்தையைக் கண்டால், நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்த ஒருவரோ இறக்கப் போகின்றார் என்று அர்த்தம்.
மூழ்குபவரை காப்பாற்றுதல்
ஒருவர் நீரில் மூழ்கிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவரை இன்னொருவர் சென்று காப்பாற்றுவதைப் போல் கனவு வந்தால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறப்படுகிறது.
பாம்பு
நிஜ வாழ்க்கையிலும் பாம்பைக் கண்டால் அனைவருக்குமே ஒருவித பயம் இருக்கும். இந்நிலையில் பாம்பைக் கனவில் கண்டால், அது அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தலைக் குறிக்கிறது.
கறுப்பு பறவை
ஒரு காகம் அல்லது கறுப்பு இறகுகள் கொண்ட பறவையைக் கண்டால் அது ஒரு மனிதன் இறந்து கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கிறது. அதாவது மரண எச்சரிக்கையாகக் கூறப்படுகிறது.
image - stock adobe.com
பல் விழுதல்
பற்கள் விழுவதைப் போல் கனவு கண்டால் நமக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இறந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.
கறுப்பு பூனை
பொதுவாகவே கறுப்பு பூனைகள் துரதிர்ஷ்டத்தை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் கறுப்பு பூனைகளை கனவில் காண்பதென்பது, பாதுகாப்பின்மை, விவரிக்கப்படாத பயம் போன்றவற்றையும் எதிர்காலத்தில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதையும் வெளிக்காட்டுகிறது.