கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கறுப்பு டீ! 3 நிமிடத்தில் ரெடி
கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, தலைமுடி உதிர்தலைத் தடுப்பது, சருமப் பிரச்சினை, உடல் எடையைக் குறைப்பது, சிறுநீரகப் பிரச்சினை, இதய நோய்கள் வராமல் தடுப்பது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என பல பிரச்சினைகளுக்கும் கருஞ்சீரகம் தீர்வாக அமையும்.
அதனால் கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் அகட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.
அதை எப்படி தயாரிப்பது என்று இங்கு பார்ப்போம்.
கருஞ்சீரக டீ
தேவையான பொருள்கள்
- கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
- புதினா - 1 கைப்பிடியளவு
- இஞ்சி - 1 துண்டு
- தேன்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.
கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும்.
இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள். புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.
புதினாவைச் சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ ரெடி.
குடிக்கும் முறை
தயார் செய்து வைத்திருக்கும் டீயை குடிக்கும் பொழுது, அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கொண்டு குடிக்க வேண்டும். நீங்கள் பொதுவாக டீ குடிக்கும் நேரங்களில் இந்த டீயைக் குடிக்கலாம்.
ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இந்த கருஞ்சீரக டீ குடிப்பது தான் நல்ல பலன் தரும். உடலை சுத்தம் செய்து வேகமாக எடையைக் குறைக்க வேண்டுமென்றால் காலை குடிப்பது போலவே மாலையிலோ அல்லது இரவு தூங்கும் நேரத்திலோ ஒரு கப் குடித்து வரலாம்.
நல்ல பலன் கிடைக்கும்.
இந்த கருஞ்சீரக டீ குடித்து வரும் சமயங்களில் பால் சேர்த்த டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.