மகன், மருமகளின் விவாகரத்து துரதிர்ஷ்டமானது: முதன் முறையாக உருக்கமாக பேசிய மாமனார் நாகர்ஜுனா
சமந்தா மற்றும் சாகசைத்தன்யா விவாகரத்து குறித்து முதன்முதலாக மாமனார் நாகார்ஜுனா இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், திடீரென ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரிந்துள்ளனர்.
இதனை இன்று இருவரும் உறுதி செய்யும் விதமாக தனது சமூகவலைத்தளங்களில், ஒரே நேரத்தில் இருவரும் பிரிவதாக பதிவு ஒன்றினை வெளியிட்டனர்.
இருவரும் முன்னதாக 10 ஆண்டுகளுக்கு மேலாக நட்புடன் பழகியதாகவும் தற்போது பிரிந்து அவரவர் பாதையில் பயணிக்க உள்ளதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர். இந்த தங்களது முடிவுக்கு மதிப்பளித்து தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் ரசிகர்களை கோரியுள்ளனர்.
இதற்கு நடிகர் மற்றும் மாமனாருமான நடிகர் நாகார்ஜுனா கூறுகையில், இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று கனத்த இதயத்துடன் தான் கூறுவதாகவும், இது கணவன் மனைவியான அவர்களின் சொந்த பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமந்தா மற்றும் சைதன்யா இருவரும் தன்னுடைய விருப்பத்திற்குரியவர்கள் என்றும், சமந்தாவுடன் தன்னுடைய குடும்பத்தினர் செலவிட்ட தருணங்கள் மிகவும் சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்களுக்கு கடவுள் மனவலிமையை தரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021