மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும் பேரீச்சம்பழ மில்க் ஷேக்!
பொதுவாகவே பேரீச்சம் பழம் என்பது பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது.
மலச்சிக்கல், சீரற்ற குடலியக்கம் இருந்தால் பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், இதற்கு நல்ல தீர்வாக அமையும்.
இது குடல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் குறைக்கும்.
சரி இனி ஆரோக்கியம் நிறைந்த பேரீச்சம்பழ மில்க் ஷேக் எவ்வாறு செய்வதென பார்ப்போம்.
image - yummy food recepies
தேவையான பொருட்கள்
பேரீட்சைப்பழம் - 15
பால் - 2 கப் (காய்ச்சி ஆறவைத்தது)
தேன் - 1 கரண்டி
முந்திரி - 1/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 கரண்டி
பாதாம் - 1/4 கப்
குங்குமப் பூ - 1 சிட்டிகை
image - the newyork times
செய்முறை
முதல் நாள் இரவே பாதாமை தண்ணீரில் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் விதை நீக்கிய நறுக்கிய பேரீச்சைப்பழம், பால், முந்திரிப் பருப்பு, தோலுரித்த பாதாம், பிஸ்தா என்பவற்றை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பால் நன்றாக வெந்தவுடன் அதனை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதில் காய்ச்சி ஆறவைத்த பால், தேன் சேர்த்து மிக்சியில் அரைத்தால், சுவையான பேரீச்சைப்பழ மில்க் ஷேக் நொடியில் ரெடி.