பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் முந்திரி! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?
பலகாரங்கள், பாயாசம் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றில் சுவைக்காக சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் முந்திரி.
இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.
இருப்பினும் இதனை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக அமைகின்றது. அந்த வகையில் முந்திரையை அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
சிறுநீரக பாதிப்பு
அளவுக்கு அதிகமாக உப்புள்ள முந்திரியை உட்கொண்டால், அது பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் அல்லது இதய நோய்க்கு வழிவகுக்கும்.
இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு அன்றாடம் மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள் முந்திரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள மக்னீசியம், இந்த மருந்துகளின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, நீர்க் கோர்வை மற்றும் குமட்டல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
முந்திரி ஆரோக்கியமான ஒன்றாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடல் பருமனை அதிகரித்துவிடும்.
முந்திரியை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், ஒரு நாளைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கக்கூடிய இதர உணவுகளை உண்ண முடியாமல் போகும்.
யார் சாப்பிட வேண்டாம்?
உப்புள்ள முந்திரியில் சோடியம் அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிகமான அளவில் முந்திரியை உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
ஏற்கனவே ஒற்றைத் தலைவலியால் மற்றும் தலைவலி உள்ளவர்கள், முந்திரியை அதிகமாக சாப்பிட்டால், நிலைமை மேலும் மோசமாகும்.
முந்திரியில் ஆக்ஸலேட் உப்புக்கள் உள்ளதால் இவை கால்சியம் உறிஞ்சுவதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாவிட்டால், அது சிறுநீரகங்களில் கற்களாக உருவாகிவிடும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு முந்திரி சாப்பிடலாம்?
யாராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸிற்கு அதிகமாக முந்திரியை சாப்பிடக்கூடாது. ஒரு அவுன்ஸ் என்பது 18 முழு முந்திரி இருக்கும்.