நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா?அப்போ இந்த பானம் குடிங்க..ஒரே வாரத்தில் ரிசல்ட்!
உடலுக்கு சக்தியை வாரி வழங்கும் பொருட்களில் பேரிச்சம் பழம் முதல் இடத்தை பிடிக்கின்றது.
தினமும் 2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால் போது உடலுள்ள அனைத்து பாகங்களும் நன்றாக இயங்க ஆரம்பிக்கும்.
மேலும் சீரற்ற குடலியக்கம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது என மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளார்கள்.
இது மட்டுமல்லாது குடல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் குறைக்கின்றது.
அந்த வகையில் பேரிச்சம் பழத்தை வைத்து சுவையான மில்க் ஷேக் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 2 கப்
பேரீட்சைப்பழம் - 15
பாதாம் - 1/4 கப்
முந்திரி பருப்பு - 1/4 கப்
பிஸ்தா - 1 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 ஸ்பூன்
பால் - 500 லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது)
தேன் - 1 ஸ்பூன்
குங்கும பூ - 1 சிட்டிகை
செய்முறை
மில்க் ஷேக் செய்வதற்கு முதல் நாள் இரவு பாதாமை நன்றாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அகலமான பாத்திரத்தில் பால், விதை நீக்கி நறுக்கிய பேரீட்சைப்பழம், ஊறவைத்து தோலுரித்த பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா ஆகிய பொருட்களை சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
வெந்து கொண்டிருக்கும் போது அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும் 10 நிமிடங்களுக்கு பின்னர் கலவையை எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
மில்க் ஷேக்கில் தேன், காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து ப்ளேன்ட் செய்தால், சுவையான பேரீட்சைப்பழ மில்க் ஷேக் தயார்!