உடலில் இது குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்! என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பல விதமான நோய் தொற்றுக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கிறது.
சமிபக்காலத்திற்கு முன்னர் வைரஸ்களினால் பரவக்கூடிய கொரோனா, டெங்கு மற்றும் மெட்ராஸ் ஐ போன்ற நோய் தொற்றுக்கள் பரவி வந்ததது.
மேலும் இந்த தொற்றுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தான் அதிகமாக தாக்கியிருந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி கேக், பன், பிஸ்கட் உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டால் குறைவடைகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பச்சை காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள், கீரை வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவதை சில் அறிகுறிகள் வதை்து கண்டறியலாம்.
உடலில் ஏற்படும் அறிகுறிகள்
மலச்சிக்கல்
முறையானதொரு உணவு பழக்கவழக்கங்கள் இல்லாத காரணத்தால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படுகின்றனர்.
இதனால் வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியேற்றப்படாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்காமல் செல்கிறது.
சரும பிரச்சனை
மலச்சிக்கல் காரணமாக கழிவுகள் ரத்தத்தில் கழிவுகள் நிறைந்து காணப்படும் போது சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உதாரணமாக தேமல், படர்தாமரை, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் கூறலாம்.
உடல் சோர்வு
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது. இதனால் வேலையில் ஆர்வமில்லை, பகல் வேளைகளில் தூக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாகிறது.