CWC செட்டில் ராமரை அடிக்கச் சென்ற பூஜா.. உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கும் புகழ்- நடந்தது என்ன?
குக் வித் கோமாளி செட்டில் இராமரை அடிக்கச் சென்ற பூஜாவின் செயல் குறும்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சீசன் 6 ஆரம்பம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குடும்ப பெண்களின் அதிக கவனத்தை தொட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.அத்துடன் இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 6 பிரமாண்டமாக தொடங்கிய வேளையில், நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு இருந்தார்கள். 6 ஆவது சீசனில் மூன்றாவதாக செஃப் கௌசிக் இணைந்துள்ளார்.
கடுப்பில் அடிக்க சென்ற பூஜா
இந்த நிலையில், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இருப்பவர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில், ஒரு எபிசோடில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூஜாவுக்கும் இமாருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.
அதாவது பூஜா பொருட்களுக்கான விளக்கத்தை கூறுவார், அதற்கு இராமர் பதிலை கண்டுபிடித்து கூற வேண்டும். இந்த டாஸ்க்கில் இராமர் வேண்டும் என்றே தவறான பதிலைகளை கூற, அதில் கடுப்பான பூஜா இராமரை சென்று அடிக்கிறார். அத்துடன் “மாற்றி சொல்லு.. இப்போ சொன்னனே..” என்றும் பேசுகிறார்.
இவற்றையெல்லாம் விட மூத்த கலைஞரை இப்படி பேசும் பொழுது, புகழ் பக்கத்தில் இருந்து ஏற்றி விடுகிறார்.
இந்த காணொளி குறும்பட காட்சியாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |