ப்ரோமோஷன் செய்ய வந்த இடத்தில் புகழை கலாய்த்த ஹன்சிகா! அதிர்ந்து போன கோமாளிகள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகமாக பெண் போட்டியாளர்களை கலாய்ப்பவர் புகழை நடிகை ஹன்சிகா இந்த சீசனில் கலாய்த்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் “குத் வித் கோமாளி சீசன் 4” முதல் இடம் பிடிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகள், குக்கள் என இரண்டாக பிரித்து தான் விளையாடுவார்கள்.
மேலும் குத் வித் கோமாளி ஷோ என்றாலே மக்கள் மத்தியில் ஒரு கிலு கிலுப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவிலும் ஒரு டைட்டில் வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதன்படி, கடந்த சீசன்களில் ஸ்ருதிகா மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய பிரபலங்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இந்த நிலையில் இந்த ஷோவை பரபரப்பாக்க ஜிபி முத்து ,மோனிஷா பிளெஸ்ஸி , ரவீனா தாஹா ஆகியோர் புதிய கோமாளிகளாக இணைத்து கொள்ளப்பட்டார்கள். இவர்கள் வாரம் வாரம் புதிய கெட்டப்பில் வந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்துவார்கள்.
இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா, விசித்ரா, கிஷோர் ராஜ்குமார், ஷிவாங்கி, ஸ்ருஷ்டி, ஷெரின் ஆகியோர் புதிய போட்டியாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய சிவாங்கிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதால் இந்த சீசனில் அவர் குக்காக மாறியுள்ளார். இவருடைய நகைச்சுவை தன்மையால் இந்த ஷோவிற்கு பல ரசிகர்களை இழுத்து வைத்துள்ளார் என்றே கூற வேண்டும்.அந்தளவு மக்கள் மத்தியில் ஒரு ரீச் சிவாங்கிக்கு இருக்கிறது.
முக்கிய போட்டியாளரை கலாய்த்த ஹன்சிகா
இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளரை எலிமினேட் செய்து விட்டு புதிய வாரத்திற்கு வந்துள்ளது. என்பதால் போட்டியாளர்கள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது.
தொடர்ந்து கடந்த வாரம் கிஷோர் போட்டியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது, அதில் நடிகை ஹன்சிகாவின் திருமணத்தை அதாவது, லவ் ஷாதி ட்ராமாவுக்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக ஹன்சிகா அவர்கள் குக் வித் கோமாளி சீசன் 4 க்கு வருகை தந்துள்ளார்.
அப்போது நடிகை ஹன்சிகா போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதன்போது புகழ் பேச முட்டார், அதற்கு பதில் கூறும் விதமாக, “ நீ தானே எல்லா பொண்ணையும் இங்க கரெக்ட் பண்ணுற, கல்யாணம் உனக்கு ஆகிட்டுள்ளே” என கேலி செய்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த போட்டியாளர்களுக்கு நகைப்புக்குள்ளாகியுள்ளதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ஹன்சிகாவே புகழின் லீலைகளை கண்டுபிடித்து விட்டார்.” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.