குக் வித் கோமாளி சிவாங்கிக்கு இன்ஸ்டாவில் அடித்த லக்... மகிழ்ச்சியின் உச்சத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மூலமாக மக்களுக்கு அறிமுகமான சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலர் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
இவர் செய்யும் குறும்புத்தனம் பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தற்போது, பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கிறார் சிவாங்கி.
இந்நிலையில் குக் வித் கோமாளி 3 எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டிருந்த சிவாங்கி தற்போது 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்றதால் தனது மகிழ்ச்சியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சிவாங்கி தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.