ஸ்ருதிகா நள்ளிரவில் செய்யும் கூத்து....கணவர் உடைத்த ரகசியம்!
குக் வித் கோமாளி 3 இன் முதல் பைனலிஷ்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி.
முதல் மற்றும் இரண்டாவது சீசன் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
மூன்றாவது சீசனும் இறுதி கட்டத்தினை நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் போட்டியாளர்களுடன் அவர்களின் உறவினர்களும் ஜோடியாக சமைத்தனர்.
போட்டியாளரான ஸ்ருதிகாவுடன் அவரது கணவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அன்றைய தினம் மிகவும் சிறப்பாக சமைத்து முதல் 5 போட்டியாளரில் முதலாவது பைனலிஷ்டாக ஸ்ருதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு இமியூனிட்டி ஐடல் வழப்பட்டது. கணவர் வந்த அன்று இப்படி ஒரு பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் ஸ்ருதிகா துள்ளி குதித்தார்.
அது மட்டும் இன்றி அவர் பற்றிய ஒரு ரகசியத்தையும் முதல் ஸ்ருதிகாவின் கணவர் குறிப்பிட்டு நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கியுள்ளார்.
தினமும் இரவு நித்திரைக்கு செல்லும் முன்னர் பல்லி இருக்கின்றதா என்று தேடுவாராம்.
எப்போதாவது பல்லி இருந்தால் அதை அவர் அடிப்பது இல்லையாம். நன்றாக தூங்கி கொண்டிருக்கும் தன்னை தான் எழுப்புவார் என்று தெரிவித்து அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார்.
குழந்தை மனது கொண்ட ஸ்ருதிகா முதலாவது பைனலிஷ்டாக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பற்றிய தகவல்களை பகிர்ந்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.