வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
நமக்கு உணவில் உள்ள சத்துக்கள் எல்லாம் அப்படியே கிடைக்க வேண்டும் என்றால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.
அதனால் பல மருத்துவ குணம் கொண்ட பொருட்களை காலை வேளையில் உண்பது நல்லது என கூறுவார்கள். சுற்றுப்புறச்சூழலில் பல மருத்துவ குணம் கொண்ட இலைகள் இருக்கின்றன.
அந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய இலைகள்
1. கறிவேப்பிலையை ஒரு பத்து இலைகள் எடுத்து அதை காலை நேரத்தில் ஒன்றும் சாப்பிடாமல் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கொலஸ்ட்ரோலின் அளவு குறையும்.
இருதய நோயை குறைக்கும். இதில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. நீங்கள் கறிவேப்பிலையை காய்ந்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம், பச்சையாகவும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டிலும் ஒரே வகையான சத்துக்கள் தான் உள்ளது.
2. துளசி மூலிகை இலைகளில் மிகவும் சிறந்த இலை என்றே சொல்லலாம். ஒரு செம்பு பாத்திரத்தில் துளசி இலைகளை போட்டு இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
பின்னர் அதை காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்களுக்கு குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் தோல்சுருக்கம் நீங்கும். நரம்புகள் பலப்படும். கண் பார்வை கூர்மையாக இருக்கும்.
3. புதினா இலையை தண்ணீரில் போட்டு மூடிவைத்து மறுநாள் காலையில் அதை குடிக்க வேண்டும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வாயில் துர்நாற்றம் இருந்தால் இல்லாமல் போகும். வயிற்று வலி பிரச்சனை இருப்பவர்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் இந்த நீரை குடித்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |