குழந்தைகளுக்கு ஏற்ற அசைவ உணவுகள் எதுனு தெரியுமா?
குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை சாப்பிட கொடுக்கலாம் என்றதும் எந்த உணவை சாப்பிடக் கொடுப்பது என்ற குழப்பத்தில் பதில்தான் இந்த பதிவு ஆகும்.
அசைவ உணவுகளான மீன், சிக்கன், மட்டன் இந்த மூன்றிலும் அதிகமான புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
மேலும் வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஹீமோகுளோபின், 9 முக்கியமான அமினோ அமிலங்கள் இதில் இருக்கின்றது. அப்படியென்றால் எதை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும்.
மீன்
கடல் உணவுகளில் ஒன்றான மீன் உணவுகள் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாகும். மீனில் அதிகமான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா 3 இருக்கின்றது. ஒமேகா 3 இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
மேலும் குழந்தைகளின் மூளை வளர்சிக்கும், கண்ணிற்கும் மிகவும் நல்லது. எலும்புகள் வலுப்பெறவும், புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் மீன் உதவுகின்றது.
வாரத்திற்கு 3 முறை மீன் சாப்பிட்டு வந்தால் மார்பக, பெருங்குடல், கருப்பை, தொண்டை புற்றுநோய் வராமல் பாதுகாக்கின்றது.
சிக்கன்
மீனைப் போன்றும் சிக்கனில் அதிகளவில் புரதம் நிறைந்துள்ளது. குழந்தைகள் வலுவாகவும், உயரமாகவும் வளருவதற்கு தேவையான அமினோ அமிலங்கள் சிக்கனில் இருக்கின்றது. சிக்கன் சாப்பிட்டதும் வயிறு நிறைந்துவிடுவதால், தேவையற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட மாட்டார்கள்.
மட்டன்
மட்டனில் அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. தற்போது இல்லை என்றாலும் பிற்காலத்தில் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |