நெருங்கி வரும் அட்சய திருதியை... மளமளவென சரிந்த தங்கம் விலை! வாங்க சரியான நேரம்;
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வந்தன.
இந்நிலையில், அட்சய திரிதியை வருகிற 3-ம் திகதியில் வருவதால்,இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38,696-க்கு விற்பனையானது. மாலையில் ஒரு பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.38,800-க்கு விற்பனையானது.
கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,400 குறைந்துள்ளது.
வெள்ளியின் விலையும் படிப்படியாகக் குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000-க்கும் விற்பனையாகிறது.
இது கடந்த 19-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கு விற்பனையானது.