ஒரு பேன் இல்லாமல் வேறுடன் அலசி எடுக்கும் கை மருந்து! இனி ஷாம்போக்கள் தேவையில்லை!
பொதுவாக அதிகம் வியர்க்கும் பெண்களுக்கு இந்த பேன் தொல்லை இருக்கும். பேன் இருப்பவர்களை இலகுவாக அடையாளம் கண்டுக் கொள்ளலாம்.
அவர்களின் கை எப்போதும் தலைக்கு தான் செல்லும். தலையை சொரிந்து கொண்டே இருப்பார்கள் இது நாளடையில் அவர்களுக்கு பல சௌகரியங்களை ஏற்படுத்தும்.
எந்த நேரமும் தலையில் கை வைத்து கொண்டிருந்தால் மற்றவர்கள் அவர்களை பொது இடங்களில் அசிங்கப்படுத்துவார்கள். அது மட்டுமல்ல பேன்கள் இருந்தால் கண்டிப்பாக வெள்ளை வெள்ளையாக தலைமுடிகளில் ஈறுகள் இருக்கும்.
இதனால் பெண்கள் நினைத்தது போல் புதிய புதிய ஹேயர் ஸ்டைல் கூட போட முடியாது. இந்த பிரச்சினை பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக இருக்கும்.
இதனை ஓரே மருந்தில் விரட்டியடிப்பது போன்று ஒரு கை வைத்தியத்தை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
கை மருந்து
1. சீத்தாப்பழ விதை
பொதுவாக கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் இந்த சீத்தாப்பழம். இதனை சாப்பிடுவதால் ஏராளமான ஊட்டசத்துக்கள் எமக்கு கிடைக்கின்றது. இது எப்படி பேன் தொல்லைக்கு பயன்படுகின்றது என தெரிந்து கொள்வோம்.
சீத்தாப்பழ விதைகளை எடுத்து நன்றாக கழுவிட்டு காய வைத்து பொடியாக இடித்து கொள்ளவும். அரைத்தாலும் நல்லது. இதனை தொடர்ந்து குளிக்கும் முன்னர் சீயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் ஒரே மாதத்தில் பேன்னை தடம் தெரியாமல் அழிக்கலாம்.
2. வேப்பிலை மற்றும் துளசி
நமது உடலிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தும் மருந்து தான் வேப்பிலை. இதனுடன் துளசி சிறிதளவு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
அதை தலை முடியின் வேர்களில் படும்படி தேய்த்து, நன்றாக தலையில் இருந்தவாறு காய விட வேண்டும். இந்த மருந்தை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் போதும் பேன் தொல்லை வரவே வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |