அயோடின் குறைப்பாட்டு பிரச்சினையா? அப்போ இந்த பழங்கள் அவசியம் சாப்பிடுங்க
தற்போது நாம் பின்பற்றி வரும் மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக ஏகப்பட்ட நோய்களின் தாக்கம் இருக்கிறது.
சில நோய்களுக்கு இதுவரையில் மருந்துகள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. 40 வயது கடந்தவர்களுக்கு வரும் நோய்கள் பிறந்த குழந்தைகளுக்கு கூட இருக்கிறது. இதற்கான ஒரே தீர்வு நீங்கள் மருந்து என நினைத்தால் அது தவறு. உங்களுடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நோய்கள் இல்லாமல் நீங்கள் நினைப்பது போன்று நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழலாம். உணவே சிறந்த மருந்து என முன்னோர்கள் கூறுவார்கள். என்ன தான் நோய் வந்தாலும், அதனை உணவாலும் குணமாக்க முடியும்.
அப்படி நம்மிள் பலருக்கும் இருக்க ஆரோக்கிய குறைபாடுகளில் ஒன்று தான் அயோடின் குறைபாட்டு பிரச்சனை.
இந்த நோய் நிலைமையானது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் போதுமான அளவு அயோடின் சத்து இல்லையென்றாலும் ஏற்படும்.அயோடின் சத்து குறையும் பொழுது தைராய்டு சுரப்பி, வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.

இது போன்று அயோடின் குறைப்பாட்டு பிரச்சினையால் ஏற்படும் விளைவுகளையும், அதனை சரிச் செய்யும் பழங்கள் என்னென்ன என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
அயோடின் குறைப்பாட்டு பிரச்சினை
தாக்கம்
உணவில் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தாமல் சாப்பிட்டால், அல்லது போதுமான அளவு சத்துக்கள் இல்லாத உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது அயோடின் குறைபாட்டு பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
அயோடின் குறைபாட்டு பிரச்சினையால், தைராய்டு சுரப்பி கோளாறுகள் (முன்கழுத்துக் கழலை), அறிவு வளர்ச்சி குறைபாடுகள், வளர்ச்சிப் பிரச்சனைகள் மற்றும் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும்.

இந்த நோயின் தாக்கம் உலக அளவில் சுமாராக 2 பில்லியன் மக்களுக்கு இருக்கிறது. தைராய்டு ஹார்மோன்கள் (T3, T4) உற்பத்திக்கு அயோடின் முக்கியமான தாதுப் பொருளாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
காரணங்கள்
1. கடல் உணவுகள், அயோடின் கலந்த உப்பு, மற்றும் சில காய்கறிகள் போன்ற அயோடின் நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளாத ஒருவருக்கு அயோடின் குறைபாட்டின் பாதிப்பு நிச்சயமாக இருக்கும்.
2. சில நிலப்பகுதிகளில் உள்ள மண்ணில் அயோடின் குறைபாடு இருந்தால், அங்கு வளரும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றிற்கு அயோடின் குறைப்பாட்டு பிரச்சினை இருக்கும்.

3. அயோடின், தைராக்ஸின் (T4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (T3) ஹார்மோன்களின் உற்பத்தி குறிப்பாக பெண்களுக்கு அவசியம். அயோடின் சத்து குறையும் பொழுது தைராய்டு சுரப்பி பாதிப்பிற்குள்ளாகி, பெண்களின் கர்ப்பம், மாதவிடாய், மனநலம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சாப்பிட வேண்டிய பழங்கள்
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழமான பெர்ரி பழத்தை சாப்பிடுவதால் அயோடின் குறைபாட்டிற்கு நல்லது. ஏனெனின் இது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.
- வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சைப்பழம் ஆகியவற்றையும் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும்.
- சந்தைகளில் மிக எளிமையாக வாங்கக் கூடிய வாழைப்பழம் அயோடின் குறைபாட்டு பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிடலாம். இது நோயின் தாக்கத்தை குறைப்பதை விட உடலுக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்குகிறது.

- நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்டுக்கு பெயர் போன மாதுளை பழத்தை வாங்கி சாப்பிடலாம். இதுவும் உங்களுடைய உடல் நலத்திற்கு ஏகப்பட்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
- வெறும் பழங்கள் சாப்பிடுவதால் அயோடின் குறைபாடு முடிவுக்கு வராது. அயோடின் கலந்த உப்பு, கடல் உணவுகள், பால், முட்டை, பருப்பு வகைகள், பசலைக்கீரை போன்ற உணவுகளையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் பொழுது அயோடின் குறைபாட்டு பாதிப்புக்கள் குறையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |