முள் சீத்தாப்பழத்தில் மூக்கின் மேல் கை வைக்கும் அளவிற்கு இவ்வளவு நல்ல விஷயம் இருக்கா! யாரெல்லாம் சாப்பிடவே கூடாது?
health
Benefits of Soursop
Soursop
By Nivetha
முள் சீத்தா பலத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொட்டிக்கிடக்கின்றது. இதன் உருவத்தை பார்த்து பலர் விரும்ப மாட்டார்கள்.
இப்பழமானது மூன்று முதல் ஐந்து கிலோ எடைவரை இருக்கும். இப்பழம் பொதுவாக ஒரு அடி நீளத்தினையும், ஒரு அடி அகலத்தினையும் கொண்டிருக்கும்.
இப்பழத்தின் உட்புறச் சதையானது வெள்ளை நிறத்தில் கிரீம் போன்று காணப்படும். இதனுள் அடர் பழுப்புநிற விதைகள். காணப்படுகின்றன.
அற்புதமான சுவை கொண்ட முள் சீத்தாவின் முழு மருத்துவ குணங்களையும் பற்றி அறிந்து கொண்டு, நாமும் பயன் பெறுவோம்.
- நமது உடல் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு பண்பினைப் பாதுகாப்பதால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும்.
- விட்டமின் சி-யினை உடைய முள் சீதாப்பழம் நோய் எதிர்ப்பு பண்பினை நமக்கு வழங்குகிறது.
- இப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாள்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
- இப்பழச்சாறு மனஅழுத்தத்தை போக்கக்கூடிய மருந்தாக பலநூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
- இப்பழத்தில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் காரணமாக இது அதிக பதட்டத்தோடு கூடிய மனஅழுத்தத்திற்கு நிவராணம் அளித்து நல்ல தூக்கத்தினைத் தருகிறது.
- எனவே மனஅழுத்தத்தால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த தீர்வாகும்.
- வாதம் மற்றும் கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு முள் சீதா இலையிலிருந்து எடுக்கப்படும் சாறானது பயன்படுத்தப்படுகிறது.
- இச்சாற்றினை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும்போது இதில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் விரைந்து செயல்பட்டு நிவாரணம் அளிக்கிறது.
- முள் சீதாஇலைச்சாறானது பாதிக்கப்பட்ட இடத்தின் வீக்கத்தினைக் குறைத்து வலியை குணமாக்கி எளிதாக மூட்டுகளை அசைக்கச் செய்கிறது.
- இப்பழச்சாற்றினை அடிபட்ட மற்றும் நாள்பட்ட காயங்களின் மீது தடவும்போது வலிநிவாரணம் கிடைக்கிறது. இப்பழத்தின் மயக்கம் மற்றும் அழற்சி பண்புகள் காரணமாக இப்பழம் உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புற வலிகளுக்கு நிவாரணியாக உள்ளது.
எச்சரிக்கை
இப்பழம் மற்றும் இலைகளை அதிகளவு பயன்படுத்தும்போது இது நடுக்கு வாதத்தினை ஏற்படுத்தும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்தப்பழத்தை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US