பேன் தொல்லை தாங்க முடியலையா? ஒன்று விடாமல் விரட்டியடிக்க சூப்பரான டிப்ஸ்
பெண்களுக்காக இருக்கும் தலைமுடி பிரச்சினைகளில் பேன் தொல்லையையும் குறிப்பிடலாம்.
இந்த பிரச்சினை அதிக வியர்வை பிரச்சினையுள்ளவர்களுக்கு இருக்கும்.
காரணம், ஒருத்தருக்கு இருந்தால் கண்டிப்பாக இன்னொருவருக்கு பரவும். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்யலாம்.
அந்த வகையில் பேனை தடம் தெரியாமல் அழிப்பதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
1. வேப்பிலை மற்றும் துளசி
வேப்பிலை மற்றும் துளசி ஆகியவற்றை எடுத்து நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
நைசாக இருந்தால் தான் தலையில் நன்றாக படும் படி தடவிக் கொள்ள முடியும். ஆகையால் நன்றாக அரைத்து எண்ணெய் இல்லாத தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து விட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.
2. பூண்டு
5 பூண்டுகளை எடுத்து அதில் தோல் நீக்கி விட்டு அரைத்து கொஞ்சமாக எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு பூசுங்கள்.
இவ்வாறு பூசி மசாஜ் செய்து விட்டு 10 - 15 நிமிடங்கள் தலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்.