காலை வெறும் வயிற்றில் சீரக தண்ணீர்! தாறுமாறாக எடையை குறைக்கலாம்
மசாலா மற்றும் மூலிகைகள் உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், அவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. எடை இழப்புக்கு உதவுவது முதல் செரிமான பிரச்சனைகளைத் தடுப்பது வரை, பல சமையலறை மசாலாப் பொருட்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
எனவே ஆரோக்கியமாக இருக்க’ சப்ளிமெண்ட்ஸ் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, இந்த அற்புதமான சமையலறை மசாலாப் பொருட்களை ஏன் பயன்படுத்தக்கூடாது?
அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால், மிகவும் பயனுள்ள ஒரு எளிய தீர்வு எங்களிடம் உள்ளது.
“காலையில் எழுந்ததும் முதலில் சீரகத் தண்ணீரைக் குடியுங்கள். இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது, வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது, ”என்று ஊட்டச்சத்து நிபுணர் மிஷா அரோரா இன்ஸ்டாகிராமில் பதிவில் கூறினார்.
சீரக நீரில் உள்ள நன்மைகள்
- கலோரிகள் குறைவு
- செரிமானத்திற்கு உதவுகிறது
- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
- உடலை நச்சு நீக்குகிறது
- அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது
எப்படி தயார் செய்வது?
ஒரு டம்ளரில் தண்ணீர் சேர்த்து, அதில் சிறிதளவு சீரக விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
காலையில் எழுந்ததும் தண்ணீரை வடிகட்டி, அதில் சூடான நீரை சேர்த்து பருகவும்.
எப்படி உதவுகிறது?
நீண்ட நேரம் ஊறவைப்பதால், சீரக விதைகள் வீங்கி, பயோஆக்டிவ் கலவைகளை தண்ணீரில் வெளியிடுகின்றன.
சீரகம் இரத்த குளுக்கோஸின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
சீரகம் உங்கள் செரிமானத்திற்கு சிறந்தது, நச்சுகளை நீக்குகிறது மேலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சீரக தண்ணீரை விட சிறந்தது எதுவுமில்லை!