பானை மாதிரி இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கலாம்: இந்த ஜூஸை குடித்தால் போதும்!
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டு போகும் தொப்பையால் பலரும் பல கேலி கிண்டல்களையும் சந்தித்து வருவார்கள்.
ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்த பாடாக இருக்காது. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள்.
சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும். இப்படியானவர்கள் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும்.
மேலும், வெள்ளரிக்காயில் அதிகம் நார்ச்சத்து இருப்பதால் இது உங்கள் ஆரோக்கியத்தைப் பேணி தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்கும்.
தேவையான பொருட்கள்
- வெள்ளரிக்காய் - 1
- எலுமிச்சை - 1
- புதினா - சிறிது
- துருவிய இஞ்சி - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் புதினா, துருவிய இஞ்சியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.
அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்