நீரில் ஊற வைத்த உலர்திராட்சை தண்ணீர்! வெறும் வயிற்றில் குடித்தால் அதிசயத்தை காணலாம்
உலர் திராட்சையில் இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இதிலுள்ள வைட்டமின்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது முதல் பல நன்மைகளைக் கொண்டிருக்கின்றன.
இதனை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பது இன்னும் பல நன்மைகளை அள்ளி தரும். அந்தவகையில் தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
உலர் திராட்சை நீர் தயார் செய்வது எப்படி?
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பினபு அடுப்பை அணைத்துவிட்டு சூடான நீரில் 20 உலர் திராட்சையை போட்டு மூடி வையுங்கள்.
இரவு முழுக்க அப்படியே ஊறட்டும். அடுத்த நாள் காலையில் உலர் திராட்சை தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும்.
அந்த நீரை அப்படியே குடித்துவிட்டு அடியில் இருக்கும் உலர் திராட்சையையும் எடுத்து சாப்பிடுங்கள்.
நன்மைகள்
தொடர்ந்து தினமும் உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் அசிடிட்டி பிரச்சினை குறையும்.
உலர் திராட்சை ஊறவைத்த நீர் உதவும். இது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடித்து வந்தால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
முடி உதிர்வை போக்க உலர் திராட்சை நீர் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இது தலைமுடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடியின் வளர்ச்சியை மிக வேகமாகத் தூண்ட உதவி செய்கிறது. இதனால் முடி உதிர்தல் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
தூக்க நோய், தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இந்த உலர் திராட்சை நீர் சரிசெய்ய உதவும்.
ஒட்டிய முகமும் கன்னங்களும் உடையவர்கள் தொடர்ச்சியாக தினமும் உலர் திராட்சை ஊறவைத்த நீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கன்னங்கள் உப்பி நல்ல பொலிவு கிடைக்கும்.