டீ குடிக்கும் போது இதை மட்டும் சாப்பிடாதீ்ர்கள்....ஆபத்து! இவ்வளவு பக்கவிளைவுகள் இருக்கு?
டீ பிரியர்கள் நிறைய பேருக்கு டீயை ரசித்துக் குடிப்பது மிகவும் பிடிக்கும்.
சிலர் டீ குடிக்கும் போது நிறைய பேர் சில உணவுகளை சாப்பிடுகின்றனர். அப்படி சாப்பிடும் போது ஆரோக்கியமற்ற உணவு சேர்க்கை ஏற்படுகின்றது.
அது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
கால் முட்டி வீக்கமா... உடனே இந்த உடற்பயிற்சியை செய்யுங்க
இன்று நாம் டீ குடிக்கும் போது என்ன மாதிரியான சில உணவுகளை சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது பற்றி பார்க்கலாம்.
பச்சை காய்கறிகள் - பச்சைக் காய்கறிகளில் இரும்புச் சத்துக்கள்6, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதனை சூடான தேநீருடன் சேர்த்து சாப்பிடவே கூடாது. தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சிலேட்டுகள் உள்ளது. உடல் இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுத்து விடும்.
கடலை மாவு - பலருக்கு பக்கோடா, பஜ்ஜி, வடை என்று கொரித்துக் கொண்டே டீ குடிக்க மிகவும் பிடிக்கும். அதனால் டீயுடன் கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்களைச் சாப்பிடுவார்கள்.
சமோசா சாப்பிட்ட நபரை அடித்துக்கொன்ற கடைக்காரர்.. நடந்தது என்ன?
ஆனால் அது உடல் ஆரோக்கியத்துக்கு மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாகவே பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது உடலுக்குக் கேடு தான். அதிலும் கட்டாயம் டீயுடன் சேர்த்து அந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த காமினேஷன் செரிமான மண்டலத்தில் பிரச்சினையை உண்டாக்குவதோடு மலச்சிக்கல் பிரச்சினையையும் ஏற்படுத்தும்.
காலிபிளவரில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்
மஞ்சள் காலை - நேரத்தில் தேநீர் குடிப்பது வழக்கம். ஆனால் தேநீருடன் சேர்த்து மஞ்சள் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சளில் உள்ள குர்குமின் போன்ற ரசாயனங்களை சூடான பானத்துடன் எடுத்துக் கொள்ளும்போது, செரிமான அமைப்புக்கு தீங்கு உண்டாகும்.
இது வயிற்றில் உள்ள அமிலத் தன்மையால் வயிறு வீக்கம் போன்றவை உண்டாகும். அதனால் மஞ்சள் அதிகம் சேர்த்த உணவுகளை தேநீருடன் சேர்த்து எடுத்துக் கொள்வது கூடாது.
எலுமிச்சை - உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் பெரும்பாலும் லெமன் டீயை விரும்பிக் குடிக்கிறார்கள். ஆனால் தேயிலையை சிட்ரஸ் அமிலத்துடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.
அது குடலின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்வதோடு வயிறு வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
முடிவு
எனவே தேனீர் குடிக்கும் போது மோசமான உணவு பழக்கத்தினை தவிர்த்திடுங்கள்.