CWC - 4 ல் மயங்கி விழுந்த சிறுவன்; நடந்தது என்ன? அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சிறுவனொருவர் மயங்கி விழுந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், மூன்றாம் சீசன் கோலகலமாக முடிவடைந்த நிலையில் நான்காம் சீசன் ஆரம்பித்துள்ளது. இந்த ஜிபி முத்து, மோனிஷா பிளெஸ்ஸி, ரவீனா தாஹா ஆகியோர் புதிய கோமாளியாக ஷோவை கலக்குவதற்காக களமிறங்கியுள்ளார்கள்.
இதன்படி, இந்த நிகழ்ச்சியில் என்ன சுவாரஸ்யம் என்றால் கோமாளிகள் வித்தியாசமான கெட்டப்பில் வந்து பார்வையாளர்களை சிரிப்போடு மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வார்கள்.
மயங்கி விழுந்த சிறுவன்
இந்த நிலையில் இந்த வாரம் குக்குகளும், கோமாளிகளும் இணைந்து சமைத்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு சிறுவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.
அப்போது காய்கறிகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவொன்றை குக் சிறுவனுக்கு ஊற்றியுள்ளார்.
இதனை சாப்பிட முடியாமல் சிறுவன் குமட்டியதுடன், வாந்தி எடுப்பது போன்று செய்துள்ளான். பின்னர் மயங்கி விழுவது போல் சிறிது நேரம் செய்து விட்டு கண் விழித்து பார்த்துள்ளார்.
இதனை பார்த்த குக் வித் கோமாளி புகழ் பயத்தில் குறித்த சிறுவனை எழுப்ப முயற்சித்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.