கருப்பு நிற ஆடையில் கலக்கல் டான்ஸ் போட்ட குக் வித் கோமாளி பிரபலம்
பார்ட்டில் கருப்பு நிற கண்ணாடி அணிந்து குத்தாட்டம் போடும் சிவாங்கியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மீடியாத்துறைக்கு அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு மீடியாத்துறைக்கு அறிமுகமாகியவர் தான் சிவாங்கி.
இதன் பின்னர் அதே தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்த குக் வித் கோமாளி என்ற போட்டியில் தான் சிவாங்கி என ஒரு ஆள் இருப்பதை மக்கள் மத்தியில் அறிமுகமானார்.
மேலும் இவருக்கு இயற்கையாகவே நகைச்சுவை செய்து, மற்றவர்களை என்டர்டைம் செய்யக்கூடிய ஆற்றல் இருந்ததால் தற்போது குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்த சிவாங்கி குக்காக வளர்ந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அஸ்வினுடன் இணைந்து பல தடவைகள் கிசுகிசுக்கப்பட்டாலும் இது தொடர்பாக இருவரும் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.
இதனால் இந்த விடயம் அத்துடன் முடிந்து விட்டது. மாறாக குக் வித் கோமாளி சீசன் 4 ல் அஸ்வீன் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் சிவாங்கி சற்று மௌனமாக தான் இருந்து வருகிறார்.
கருப்பு நிற ஆடையில் சிவாங்கி
இந்த நிலையில் நிறைய பாடல்கள் பாடி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதுடன், அவரின் ஆல்பம் பாடல்கள் வேலையையும் பார்த்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஒரு பார்ட்டியில் கருப்பு நிற பார்ட்டி ப்ரோக் அணிந்துக் கொண்டும், கண்ணுக்கு கருப்பு நிற கண்ணாடி அணிந்து கொண்டும், " ஊர் வசி..." பாடலுக்கு டொல் மாதிரியான ஒரு நடனத்தை ஆடியுள்ளார். இதன்போது பக்கத்தில் காட்ஸ் நிற்பது போன்று தெரிகிறது. அப்போது அது பெரிய பார்ட்டி தான் என தெரியவந்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள் சிவாங்கிக்கு இன்னும் குழந்தைத்தனம் போகவில்லையென நெகிழ்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.