வடை மா திருடி ஷோவில் அசிங்கப்பட்ட ஜிபி முத்து: வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
குத் வித் கோமாளி ஷோவில் ஜிபி முத்து வடை மா வை திருடி சக போட்டியாளர்கள் முன் அசிங்கபட்டுள்ளார்.
குக் வித் கோமாளி ஷோ
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் போன்று மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் ஷோ தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி வெற்றிக்கரமாக சீசன் 3 யை முடித்த நிலையில் தற்போது சீசன் 4 சென்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் கடந்த சீசன்களில் வனிதா விஜயகுமார் மற்றும் ஸ்ருதிகா ஆகியோர் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை சமையலுடன் சேர்த்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமாடிகளையும் பார்க்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த சீசனில் புதிய போட்டியாளர்களாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகிய பிரபலங்கள் சேர்த்து கொள்ளப்பட்டார்கள். இதில் ஓட்டேரி சிவா மாத்திரம் மது போதனையில் ஷோவிற்குள் வருவதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும் குக் வித் கோமாளி சீசன் 6 ல் ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் குக்காகவும், புகழ், சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாகவும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வடை மா திருடிய ஜிபி முத்து
இந்த நிலையில் இந்த சீசனில் கடந்த வாரம் எலிமினேஷன் சுற்று என்பதால் கிஷோர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சிச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் வடை சூடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த டாஸ்க்கில் காளையன் மற்றும் ஜிபி முத்து இருவரும் தான் பாட்னர்ஸாக இருக்கிறார்கள்.
அப்போது ஆண்ட்ரியாவின் வடை மாவை ஜிபி முத்து திருடிக் கொண்டு வந்து வடை சூட எத்தனிக்கும் போது குக்களிடம் மாட்டிக் கொள்கிறார். இதனை பார்த்து கொண்டிருந்த போட்டியாளர்களும் ஜிபி முத்துவை கலாய்க்க, அவர் மாவை கொடுத்து விடுகிறார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள், “ என்ன தலா வடை மா திருடி மாட்டிட்டிங்களே ” என கலாய்த்து வருகிறார்கள்.