சுந்தரி சீரியல் நடிகையின் புதிய கார் - விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
'சுந்தரி' சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடத்தை பிடித்த நடிகை கேப்ரியல்லா, தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்த கையோடு தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
கேப்ரில்லா
பிரபல டிவி நிகழ்ச்சியில் 2016ம் ஆண்டு ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனி ஆளாக கலந்து கொண்டு தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
சின்னத்திரை, சோசியல் மீடியா என தனது பங்கை வகித்து வந்த கேப்ரியல்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படத்திலும் சின்ன ரோலில் நடித்தார்.

புதிய கார்
இதையடுத்து, பிரபல தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தரி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது.
அதில், கேப்ரில்லா நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தார். சீரியல், நடிப்பும், எளிமையான அணுகுமுறையும் கொண்ட கேப்ரியல்லா, தனது வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
இதன் காரணமாகவே கேப்ரில்லா தற்போது நிறைய ரசிகர்கள தன்வயப்படுத்தி உள்ளார். அவர்களின் மனதில் மேலும் நெருக்கமாக இடம்பிடித்து வருகிறார். இவ்வளவும் கடந்தது தற்போது கேப்ரில்லா தனது வாழ்வில் முதல் வெற்றியாக புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |