குக் வித் கோமாளி அஸ்வினுக்கு நடந்த திருமணம்... வைரலாகும் புகைப்படம்
Cook with Comali Ashwin Marriage: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
குக் வித் கோமாளி அஸ்வின்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் அஸ்வின். இவருக்கு இன்று ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
சினிமாவில் சிறிய ரோலில் நடித்து வந்த அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமாவதற்கு பெரிய உதவியாக இருந்தது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தில் ஆர்யாவின் நண்பனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து ஓ காதல் கண்மணி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்பு செம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் நொடிக்கு நொடி, குட்நியூஸ் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

திடீர் திருமணம்
இந்நிலையில் இன்று அவரது திருமணம் சொந்தங்கள், நண்பர்களை மட்டும் வைத்து புவனேஷ்வரி என்ற பெண்ணுடன் நடைபெற்றுள்ளது.
திடீரென மணக்கோலத்தில் அஸ்வினைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அஸ்வினின் மனைவி புவனேஸ்வரி மறைந்த இயக்குனர் ராஜசேகரின் பேத்தி என்று கூறப்படுகின்றது.

இயக்குனர் ராஜசேகர் கமல் நடித்த விக்ரம், ரஜினி நடித்த படிக்காதவன், தம்பிக்கு எந்த ஊரு, காக்கிச்சட்டை உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
இவரது பேத்தியை தான் அஸ்வின் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |