காயம் ஏற்பட்டால் ரத்தம் வந்தவண்ணமே உள்ளதா? அப்போ உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம்...
பொதுவாகவே ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டால், ரத்தம் வழியும். வழிந்து கொண்டிருக்கும் ரத்தமானது, சில நிமிடங்களில் தானாகவே நின்றுவிடும்.
அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல் தொடர்ந்து வெளியேறுவதை ரத்தம் உறையாமை நோய் என்பர்.
தொடர்ந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தால் மரணம் ஏற்படும். இந்த ரத்தம் உறையாமை நோயானது, 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றது.
குடும்பத்தில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் இந் நோய் பாதிக்குமாம். குறிப்பாக, ரத்த உறவில் திருமணம் செய்வதால் இந்நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
image - technology networks
ஒரு குழந்தையானது, தாயின் கருவில் இருக்கும்போர் அதன் பாலினத்தை தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே இந்நோய் ஏற்படக் காரணமாக இருக்கின்றது.
இந்த நோய் இருப்பவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் உடலில் ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை அதிகப்படுத்திவிடும்.
image - drug discovery news
இந்த நோயை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?
உடலில் காயம் ஏற்படும்பட்சத்தில் ரத்தம் உறையாமல் வெளியேறுவது.
பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது.
உடலில் நீல நிற தழும்புகள் தோன்றி மறையும்.
பல் விழுந்ததன் பின்னர் அல்லது பல் எடுத்ததன் பின்னர் தொடர்ந்து ரத்தக்கசிவு நிற்காமல் ஏற்படுவது.
image - new scientist
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் இந்த ரத்தம் உறையாமை நோய் இருக்கலாம். இந்த நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகக் காணப்படுகிறது.
இருப்பினும் பிளாஸ்மா, ரத்தம் செலுத்துதல் மற்றும் உறை நிலை மருந்துகளைச் செலுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்பது மருத்துவரின் அறிவுரை.